கடலில் மிதந்து வந்த யுவதியின் சடலம்!

கொழும்பு, வௌ்ளவத்தை கடலில் மிதந்து கொண்டிருந்த நிலையில் யுவதியொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று மதியம் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வௌ்ளவத்தையை சேர்ந்த 26 வயதான யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யுவதியின் மரணத்திற்கான காரணம் தெரியாத போதும், அவர் கடலில் குதித்து தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

வெள்ளவத்தை கரையோரப் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு அருகே வரை யுவதி சிறிய ரக மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்துள்ளதாகவும், அங்கு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு கடல் பகுதியை நோக்கி சென்றதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

வெள்ளவத்தை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here