இலங்கையின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 40,000ஐ கடந்தது!

இலங்கையின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 40,000ஐ கடந்துள்ளது.

இன்று மேலும், 500 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டள்ளனர். கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போதுவரை அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின்  எண்ணிக்கை 40,282 ஆக உயர்ந்தது.

இன்று அடையாளம் காணப்பட்டவர்களில் 448 பேர் மினுவாங்கொட- பேலியகொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள சிறைகளில் இருந்து 52 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி, மினுவாங்கொட- பேலியகொட கொரோனா கொத்தணி 36,599 ஆக அதிகரித்துள்ளது.

மூன்று வெளிநாட்டு பிரஜைகள் உட்பட 8,045 பேர் தற்போது 65 வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று,  712 நபர்கள் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர். குணமடைந்வர்கள் எண்ணிக்கை 32,051 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்று சந்தேகத்தில் 433 பேர் வைத்திய கண்காணிப்பில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here