நேற்று அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் பற்றிய விபரம்!

நேற்று 551 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதில் கொழும்பு மாவட்டத்தில் 300 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் ஒருவர் வெலிக்கடை சிறை கைதியாவார்.

பொரளையில் 87 பேர், கொம்பனித்தெருவில் 30 பேர், கிருலப்பனையில் 29 பேர், மருதானையில் 21 பேர், புளுமெண்டலில் 21 பேர், மட்டக்குளி 21 பேர், அவிசாவளை 13 பேர், வெல்லம்பிட்டி மற்றும் வெள்ளவத்தையிலிருந்து தலா 10 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

கம்பா மாவட்டத்தில் 52 பேர் அடையாளம் காணப்பட்டனர். வத்தலையைச் சேர்ந்த 12 பேரும், மகர சிறைச்சாலையிலிருந்து 9 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

களுத்துறையிலிருந்து 37 பேர், நுவரெலியாவிலிருந்து 28 பேர், இரத்னபுரியிலிருந்து 27 பேர், அம்பாறையிலிருந்து 17 பேரும், கண்டியிலிருந்து 16 பேரும், மாத்தறையிலிருந்து 13 பேரும், திருகோணமலையிலிருந்து 12 பேரும், குருநாகல் மற்றும் கேகாலை மாவட்டங்களிலிருந்தும் தலா 7 பேரும், முல்லைத்தீவிலிருந்து 6 பேரும், அனுராதபுரத்திலிருந்து 5 பேரும், ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பிலிருந்து தலா 4 பேரும், காலியில் இருந்து 3 பேரும், யாழ்ப்பாணம், பொலன்னருவ மற்றும் பதுளையில் இருந்து தலா இரண்டு பேரும் அடையாளம் காணப்பட்டனர்.

அதன்படி ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் கொழும்பு மாவட்டத்தில் இருந்து 17,086 பேரும், கம்பஹா மாவட்டத்தில் இருந்து 8,602 பேரும், களுத்துறை மாவட்டத்தில் இருந்து 3,121 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here