லங்கா பிரீமியர் லீக் 2020 இல் யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸிற்காக விஜயகாந்த் வியஸ்காந்த் நேற்று அறிமுகமானர். அவரது சர்வதேச போட்டி அறிமுகத்தை சமூக ஊடகங்களில் நேற்று பலரும் பாராட்டினர்.
19 வயதான யாழ்ப்பாண மத்திய கல்லூரி வீரன் விஜயகாந்த் வியஸ்காந்த், நேற்று இலங்கை உள்நாட்டு டி 20 லீக்கில் விளையாடிய யாழ்ப்பாணத்தின் முதல் கிரிக்கெட் வீரர் ஆனார்.
இளம் கிரிக்கெட் வீரரின் அறிமுகத்தை பாராட்டியவர்களில் விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, முன்னாள் விளையாட்டு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, கிரிக்கெட் லெஜண்ட்களான குமார் சங்கக்கார மற்றும் மகேல ஜெயவர்தன ஆகியோர் அடங்குவர்.
நேற்றைய போட்டியில் யாழ்ப்பாண ஸ்டாலியன்ஸ் தோல்வியடைந்தது. என்றாலும், கொழும்பு கிங்ஸ் கப்டன் அஞ்சலோ மத்யூஸின் விக்கெட்டை தனது முதலாவது சர்வதேச விக்கெட்டாக அவர் வீழ்த்தியிருந்தார்.
இன்று அவரது பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.
Vijayakanth Viyaskanth 😍 pic.twitter.com/2f0Vrk6bsH
— cric sl (@cricslvideo) December 4, 2020