சிறைச்சாலை பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடிப்படையினர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விலக்கப்பட்டதை தொடர்ந்து, கடந்த சில வாரங்களில் வெலிக்கட சிறை வளாகத்திற்குள் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தப்பட்டிருக்கலாம் என்று அறியப்படுகிறது.
சிறைச்சாலைகளுக்கு வெளியே பாதுகாப்பு இல்லாததால் சிறைக்குள் போதைப்பொருள் கடத்தப்பட்டதாகவும், அது கைதிகளிடையே அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும் சிறை வட்டாரங்கள் தெரிவிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சிறைச்சாலைகளில் கொரோனா பரவுவதால் விசேட அதிரடிப்படையினர் சிறைகளிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர். கைதிகளின் போராட்டங்களினால் சோதனை நடவடிக்கைகளிலும் தளர்வு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதை பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.