தண்ணீர் நிறைந்த குளத்தை பார்வையிட சென்ற மாணவன் நீரில் அடித்து செல்லப்பட்டான்: வவுனியாவில் சோகம்!

வவுனியா புதுக்குளம் பகுதியில் அமைந்துள்ள நீர்த்தேக்கத்தினை பார்வையிடுவதற்கு சென்ற மாணவன் ஒருவன் நீரில் அடித்துசெல்லப்பட்ட நிலையில் மாயமாகியுள்ளார்.

அண்மையில் வவுனியாவில் பெய்த கனமழையின் காரணமாக வ்வுனியா புதுக்குளத்தில் அமைந்துள்ள நீர்தேக்கம் நிரம்பியதுடன் மேலதிக நீர் சுருங்கை வழியாக வெளியேறி வருகின்றது. இதனை பார்வையிடுவதற்காக அதிகமான பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் குறித்த நீர்தேக்கத்திற்கு தினமும் சென்ற வண்ணமுள்ளனர்.

இந்நிலையில் நீர்த்தேக்கத்தினை பார்வையிடுவதற்காக குறித்த இளைஞர் தனது நண்பர்களுடன் இன்றையதினம் மதியம் அங்கு சென்றுள்ளார். இதன்போது நீர் வழிந்தோடும் வாய்க்கால் பகுதியில் அவர் இறங்கிய நிலையில் நீரில் மூழ்கியுள்ளார்.

இதனை அவதானித்த அவரது நண்பர்கள் நீரினுள் இறங்கி இளைஞரை நீண்ட நேரம் தேடியும் அவரை கண்டறிய முடியவில்லை.

சம்பவம் தொடர்பாக ஈச்சங்குளம் பொலிசாருக்கும் தெரியப்படுத்தப்பட்டதுடன், பொலிசார் மற்றும் பிரதேச வாசிகளால் இளைஞரை தேடும் பணி தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சம்பவத்தில் தோணிக்கல் பகுதியை சேர்ந்த, பண்டாரிக்குளம் விபுலாநந்தா கல்லூரியில் கல்வி கற்கும் மாணவன் ஒருவனே இவ்வாறு காணாமல் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here