1986 ஆம் ஆண்டு இந்திய சினித்துறையில் பிரபலமான ஹீரோயின் என்றால் அது நதியா தான். அப்போது நதியா ஆடை, நதியா செருப்பு, நதியா ரபர்பான்ட் என்று அவர் அணியும் எல்லாமே நவீனத்துவமா பிரபலமாக தான் இருக்கும்.
நதியாவின் புகைப்படம் பதித்த கலேண்டர்கள் கூட ரசிகர்களால் கொண்டாடப்பட;டவை தான். அவ்வாறாக கலேண்டர்களுக்காக எடுத்து கொண்ட புகைப்படங்களை நேற்றைய தினம்(03.12.2020) தனது டுவிட்டர் பக்கத்தில் தனது பதிவேற்றியிருக்கும் நதியாக, தனத முதல் கலேண்டர் சூட் என்ற பதிவின் மூலம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்.
இதேவேளை நேற்று அவர் பதிவிட்டிருக்கும் மற்றுமொரு பதிவில் ‘மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம்’ என குறிப்பிட்டு சூப்பர் ஸ்டார் ரஜனி காந்திற்கு தனத ஆதரவையும் வழங்கியுள்ளார்.
சூப்பர்ஸ்டார் ரஜனிகாந்த் தனது கட்சியின் துவக்கம் டிசெம்பர் 31 ஆம் திகதி அறிவிக்கப்படும் என்றும் இப்போதில்லை என்றா எப்போதம் இல்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார். தனது டுவிட்டர் பதில் மேலும் கூறியிருக்கும் ரஜினிகாந்த் வரும் சட்டமன்ற தேர்தலில் நேர்மையான ஊழல் அற்ற நாதி -மத சார்பற்ற அரசியல் உருவாகுவது நிச்சயம் என குறிப்பிட்டிருக்கிறார். இதற்கு ஆதரவ வழங்கும் முகமாகவே நதியளாவின் டுவிட் பதிவும் அமைந்திருக்கிறது.