குஞ்சன் சக்சேன்: கார்கில் போரில் சுற்றியுள்ள ஆண்களிடம் தன்னை நிரூபிக்க பெண் விமானி எதிர்கொண்ட சால்களை பேசுகிறது!

‘குஞ்சன் சக்சேன்’ என்னும் ஹிந்தி திரைப்படம் தமிழில் வீரமங்கை என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. உண்மையில் பேசப்பட வேண்டிய சில திரைப்படங்களுக்கு மொழி தேவையில்லை என்று தான் கூறவேண்டும். ‘குஞ்சன் சக்சேன்’ திரைப்படமும் அப்படித்தான். நிய வாழ்வில் பல சோதனைகளை கடந்து தான் அடைய நினைத்த இலக்கை அடைந்த இந்தியாவின் வீரமங்கை குஞ்சன் சாக்சேன். இவருடைய இலக்கை நோக்கிய வாழ்க்கையை பேசுவது தான; இந்தப்படம்.

இப்படத்தை ‘ஷரன் சர்மா’ இயக்கியுள்ளார். ‘கரண் ஜோஹர்’ தயாரிப்பில் (Zee Studios) வெளியான திரைப்படம் இது. இதில் ஶ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர்,பங்கஜ் திரிபாதி,அங்கத் பேடி,ஆகிய பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். முற்றிலும் ஒரு பெண்ணை மையப்படுத்திய திரைப்படம் என்பதால் ஶ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரே படத்தின் ஹீரோ. கடந்த ஓகஸ்ட் 12 ஆம் திகதி (12.08.2020) இத்திரைப்படம் வெளியாகியிருந்தது.

குஞ்சன் சக்சேனா என்ற பெண்போர் விமானியின் இலட்சிய வாழ்க்கை பயணத்தை அழகாக எடுத்துரைக்கிறது இத்திரைப்படம்.

இந்திய விமானப்படையில் கடந்த 2016 ஆம் ஆண்டு 3 பெண் விமானிகள் அதிகாரபூர்வமாக சேர்க்கப்பட்டிருந்த செய்தி உலகறிந்ததே. ஆனால் இவ்வாறு பெண் விமானிகள் உத்தியோகபூர்வமாக விமானப்படையில் சேர்த்து கொள்ளப்படுவதற்கு முன்னரே முதல் முறையாக தன் திறமையால் காஸ்மீர் போர் எல்லைக்குள் பறந்த பெண் விமானி தான் குஞ்சன் சக்சேனா. இவருடைய வரலாற்றை பேசும் திரைப்படம் தான் ‘குஞ்சன் சக்சேன்’

நிய வாழ்க்கை

1975 இல் லுக்னோவில் பிறந்தவர் குஞ்சன். இவருடைய தந்தை ஒரு ராணுவ வீரர். அதன் வழியே இவருடைய தமயனும் இராணு வீரர். ஆதலால் இயல்பாகவே நாட்டுப்பற்றும் ராணுவ ஈர்ப்பும் உடையவர் குஞ்சன். இவர் இயற்பியலில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்தவர். 1994 ஆம் ஆண்டு 25 பெண்கள் இந்திய இராணுவ குழுவில் சேர்க்கப்பட்டனர். அதில் குஞ்சனும் ஒருவர். இந்திய இராணுவ குழுவில் முதல் பெண்படை அதுவேயாகும். இவருக்கான முதல் வேலை ஜம்மு-காஷ்மீரில் உள்ள உதம்பூரில் கொடுக்கப்பட்டது. கார்கில் போரின் போது சீட்டா என்னும் விமானத்தை பறக்க விட்ட பெண் இவர். இவர் 2004 ஆம் ஆண்டு விமானியாக தனது ராணுவ பயணத்தை தொடங்கி 7 ஆண்டுகள் கடமையாற்றி ஓய்வு பெற்றார். இந்திய கலாச்சரங்களுக்குள் வளர்ந்த குஞ்சன் ஒரு விமானியாவதற்கு பெண் என்ற ரீதியில் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள நேரிட்டது. ஆண்களின் ஆதிக்கங்கள் நேரடியாவே அவரின் இலக்குக்கு தடையாக நின்றது. எனினும் அவருடைய தந்தையின் ஆதரவுடன் அத்தனை தடைகளையும் உடைத்து விடாமுயற்சியுடன் மிக விரையில் தன் இலங்கை அடைந்து மதல் போர் விமானியாக தன்னை நிலைநிறுத்தியவர் குஞ்சன்.

திரைப்படம்

தனது சிறு வயதில் ஒரு விமானப்பயணத்தில் விமானிகளின் விமான செலுத்துகையை நேரில் பார்த்த குஞ்சனுக்கு விமானியாகும் கனவு குடிகொண்டு விடுகிறது. சிறு வயதில் இருந்து கல்வியில் சிறந;த பெறுபேற்றை பெற்றாலும் விமானி ஆகும் கனவை கடைசிவரை கைவிட முடியவில்லை. குஞ்சனால். சாதாரணமாகவே ஒரு ஆணாதிக்க இறுக்கமான இந்திய கலாச்சாரத்திற்குள் வாழ்ந்துவரம் குஞ்சனுக்கு விமானி ஆகுமு; கனவை குடும்பத்தாரிடிம் எடுத்துரைப்பதே சவாலாக அமைகிறது. அதனை தொடர்ந்து எப்படியோ தன் தந்தையின் அதரவோடு விமானி பயிற்சிக்குள் நுழைந்த குஞ்சன் அங்கு ஆண்கள் கூட்டத்திற்குள் ஒரு தனிப்பெண்ணாக எதிர்கொள்ளும் சவால்களையும் அழகாக காண்பிக்கிறது திரைப்படம்.

ஒரு பெண்ணிற்கு உடல் பலம் குறைவாகவே இருக்கும் என்பதை சாட்டாக சுட்டிக்காட்டும் சக விமானிகள் அவர் விமானம் செலுத்துவதற்கான வாய்ப்பையே தவிர்த்து வருகின்றனர். இறதியில் கார்கில் போரின்போது தவிர்க்க முடியாத நிலையில் பெண்களை களமிறக்கும் முடிவில் விமானியாக குஞ்சன் களமிறக்கப்படுகிறார்.  இங்கு தான் கஞ்சன் தன்னை நிரூபிக்கிறார். ஒரு விமானியாக கட்டுப்பாட்டு உத்தரவுகளையம் மீறி போரில் காயமடைந்த வீரர்களை காப்பாற்றும் குஞ்சன் ஒரு பெண்ணின் மனப்பலம் அவளின் உடல் பலத்தையும் அதிகரித்து விடுகிறது என்பதை விரைவில் நிரூபிக்க அந்த போர்க்காலம் குஞ்சனுக்கு உதவுகிறது. இப்படியாக குஞ்சன் ஒரு விமானியாக தன்னை நிரூபிக்க முயன்ற பயணத்தில் ஆண் சமூகத்தால் எதிர்கொள்ள மன உழைச்சல்களையும், அவருடைய இலட்சிய வாழ்க்கை வரலாற்றையும் கூறுகிறது இத்திரைப்படம்.

உண்மையில் ‘குஞ்சன் சக்சேன்’ திரைப்படம் பேசப்பட வேண்டியதும். அங்கீகரிக்கப்பட வேண்டியதும் மட்டுமன்றி அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம்.

 

     

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here