தென்னாபிரிக்க வீரருக்கு கொரோனா-ரி-20 தொடர் இடைநிறுத்தப்பட்டுள்ளது

தென்னாபிரிக்க வீரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்றைய தென்ஆப்பிரிக்கா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ரி-20 கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்ட்டுள்ளது.

தென்ஆப்பிரிக்கா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ரி-20 கிரிக்கெட் தொடர் முடிந்த நிலையில், இன்று மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்குவதாக இருந்தது.

இன்றைய போட்டிக்கு தயாராகுவதற்கு முன் கடைசி கட்ட கொரோனா பரிசோதனை நேற்று மேற்கொள்ளப்பட்டது.

அப்போது தென்ஆப்பிரிக்கா வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. இதனால் இன்றைய போட்டி 6 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2-வது போட்டி 7-ஆம் திகதியும்  3-ஆவது மற்றும் கடைசி போட்டி 9-ஆம் திகதியும் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here