பாதுகாப்பு அமைச்சின் ஒதுக்கீட்டு வாக்களிப்பில் கலந்துகொள்ள விரும்பாமல் வெளியேறிய தமிழ் அரசு கட்சி!

வரவு செலவு திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சின் ஒதுக்கீடு தொடர்பான விவாதத்தின் இறுதியில் இன்று வாக்கெடுப்பு இடம்பெற்றது.

பாதுகாப்பு அமைச்சிற்கான ஒதுக்கீடு தொடர்பில் வாக்கெடுப்பை, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கோரியது.

ஆதரவாக 137 வாக்குகள் அளிக்கப்பட்டன.

எதிராக அகில இலங்கை தமிழ் காங்கிரசின் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், ரெலோவின் செல்வம் அடைக்கலநாதன், வினோநோகராதலிங்கம், கோவிந்தன் கருணாகரம் ஆகிய 5 பேரும் வாக்களித்தனர்.

இதேவேளை, வாக்களிக்காமல் சிறிதரன் உள்ளிட்ட இலங்கை தமிழ் அரசு கட்சியினர் வெளியேறி சென்றனர்.

சி.சிறிததரன், இரா.சாணக்கியன், த.கலையரசன் ஆகியோர் வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் வெளியேறி சென்றனர்.

கூட்டமைப்பின் ஏனைய எம்.பிக்களான இரா.சம்பந்தன், த.சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும், தமிழ் மக்கள் கூட்டணியின் க.வி.விக்னேஸ்வரனும் இன்றைய அமர்வில் கலந்து கொள்ளவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here