மேலதிக அறிவிப்பு வரும் வரை சுகாதார அதிகாரிகள் ஹட்டனில் இரண்டு பகுதிகளுக்கு பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
அந்த இரண்டு பகுதிகளிலிருந்தும் ஏராளமான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அம்பகமுவ சுகாதார அலுவலர் தெரிவித்தார்.
வட்டவல சுகாதார பரிசோதகர் பிரிவின் வெலிஒய தடகெலே கீழ் பிரிவு மற்றும் கினிகத்ஹேன சுகாதார பரிசோதகர் பிரிவின் கெனில்வர்த் தோட்டம் பிளக்வோடர் கீழ் பிரிவு ஆகிய பகுதிகளுக்கு இவ்வாறு மீள அறிவிக்கும் வரையில் போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
பிளக்வோடர் தோட்டத்தின் கீழ் பகுதியில் இருந்து 15 பேரும், தடகெலே கீழ் பிரிவில் இருந்து 7 பேரும் பதிவாகியுள்ளதாக அம்பகமுவ சுகாதார அலுவலர் தெரிவித்தார்.
இந்த சூழ்நிலையை பரிசீலித்த பின்னர், மாகாண சுகாதார இயக்குநர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் போது பயணத்தை கட்டுப்படுத்த முடிவு செய்யப்பட்டது.