புரேவி அனர்த்தம்: வடமராட்சியில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!

அதிக காற்றினால் வீட்டின் கூரை வீழ்ந்ததில் ஒருவர் காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இன்று இரவு வடமராட்சி வல்வெட்டிப் பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. சம்பவத்தில் வல்வெட்டி ஆதிகோவிலடியைச் சேர்ந்த இரத்தினசாமி சாந்தரூபன் (30) என்பவரே காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

புரேவி புயலின் தாக்கத்தினால் வடமாகாணத்தில் கடும் காற்றுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது. இதில் சற்று முன்னர் வீசிய காற்றில் வீட்டின் கூரை சீற் விழுந்ததில் தலை உட்பட உடலின் பல இடங்களில் காயமேற்பட்ட நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வடமராட்சி பகுதியில் இன்று இரவு சுழற்காற்றின் தாக்கம் அவதானிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here