பாறை துகள்களை பூமிக்கு எடுத்து வர சீனா அனுப்பிய விண்கலம் நிலவில் தரையிறங்கியது

சீன ஏவிய சலஞ்ச் -5 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது.

இந்த விண்கலம் மூலம் நிலவில் இதுவரை கால் பதிக்காத பகுதியான ‘ஓஷன் ஒப் ஸ்டார்ம்ஸ்’ என்ற பகுதியிலிருந்து 2 கிலோ பாறை துகள்ளை எடுக்க சீனா திட்டமிட்டுள்ளது.

அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் வரிசையில் சீனாவும் நிலவை ஆராய்ச்சி செய்வதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் 1976ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக சீனா நிலவிலிருந்து பாறை துகள்ளை பூமிக்கு எடுத்து வந்து ஆய்வு செய்ய உள்ளது.

இதற்காக சஞ்ச் 5 என்கிற ஆளில்லா விண்கலத்தை கடந்த 24 ஆம் திகதி சீனா விண்ணில் செலுத்தியது. அந்த நாட்டின் ஹனைன் மாகாணத்தில் உள்ள வென்சாங் ஏவுதளத்தில் இருந்து லோங் மார்ச் 5 ரொக்கெட் மூலம் சஞ்ச் 5 விண்கலம் நிலவுக்கு புறப்பட்டது.

நிலவில் இருந்து பாறை துகள்களை பூமிக்கு எடுத்து வரும் விண்கலம், டிசம்பரில் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விண்கலம் நிலவில் திட்டமிட்டபடி தரையிறங்கியது. தரையிறங்கும் மேற்பரப்பில் தரையிறங்கும் காட்சி படங்களையும் சீன அரசு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த விண்கலம் மூலம் நிலவில் இதுவரை கால் பதிக்காத பகுதியான ‘ஓஷன் ஒப் ஸ்டார்ம்ஸ்’ என்ற பகுதியிலிருந்து 2 கிலோ பாறை துகள்ளை எடுக்க சீனா திட்டமிட்டுள்ளது. சீனாவின் இந்த திட்டம் வெற்றிகரமாக அமைந்தால் அமெரிக்கா ரஷ்யாவிற்கு அடுத்ததாக, நிலவிலுள்ள பாறைகளை ஆராய்ச்சி செய்த 3வது நாடாக சீனா மாறும்.

44 ஆண்டுகளுக்கு முன்பு சந்திரனில் இருந்து மண்ணைக் கொண்டுவருவதற்கான கடைசி பணியின் போது, ​​200 கிராமுக்கும் குறைவான மண் கொண்டு வரப்பட்டது. இம்முறை சோதனைக்கு போதுமான மண் மாதிரிகளை வழங்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

அமெரிக்க விண்வெளி நிறுவனம் மற்றும் நாசாவின் உயர் அதிகாரிகள் இந்த பயணத்தின் வெற்றிக்கு சீனாவை வாழ்த்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here