நீத்துப்பூசணிக்காயில் சறுக்கி விழுந்தவர் உயிரை விட்டார்!

சமயச்சடங்கிற்காக வீதியில் உடைத்த நீத்துப் பூசணிக்காயில் சறுக்கி விபத்திற்குள்ளானவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யோகநாதன் ஜெகதீஸ்வரன் (43) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்தார்.

கோண்டாவில் மேற்கை சேர்ந்த அவர் கடந்த தீபாவளி நாளில் (14) வடமராட்சி பகுதிக்கு சென்றுள்ளார். திரும்பி வரும்போது, வல்லைச் சந்தியில், சமயச்சடங்கிற்காக யாரோ உடைத்த நீர்த்துப் பூசணிக்காயில் மோட்டார் சைக்கிள் சிக்கியது. இதனால் சறுக்கி, எதிரே வந்த காரில் மோதி விபத்திற்குள்ளானார்.

உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். எனினும், 16 சிகிச்சை பெற்ற நிலையில் நேற்று முன்தினம் மரணித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here