வாகனமொன்றைப் பதிவு செய்யும் போது வாகனப் பதிவுச் சான்றிதழ், வாகன இலக்கத் தகடு மற்றும் ஸ்ரிக்கர் ஒன்றும் வழங்கப்படும். தற்போதுள்ள பொறிமுறைக்கமைய அவற்றைப் பெறுவதற்காக குறிப்பிட்ட காலமும் செலவும் அதேபோல் மோட்டார் வாகனத் திணைக்களத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. அவ்வாறே, புதிய சாரதி அனுமதிப்பத்திரம் பதிவுத் தபாலில் சேவை பெறுநருக்கு அனுப்பப்படும் போது காலதாமதம் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது. அதற்குத் தீர்வாக தபால் திணைக்களத்தின் நடைமுறையிலுள்ள விரைவுத் தபால் சேவையின் மூலம் சேவை பெறுநர்களின் வீடுகளுக்கே வழங்குவதற்காக பொருத்தமான நிகழ்ச்சித்திட்டத்தை தபால் திணைக்களத்துடன் இணைந்து செயற்படுத்துவதற்கு போக்குவரத்து அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
HOT NEWS
தற்போதைய செய்தி
பேஸ்புக் காதல்: பல்லில்லாத பாட்டியை பார்சல் செய்த இளைஞன்!
காதலுக்கு கண் இல்லையென்று சொல்வார்கள்... அது உண்மைதான் போலுள்ளது. ஏனெனில், 81 வயது பாட்டியை, 36 வயது இளைஞர் ஒருவர் காதலித்து, கரம்பிடித்து, இல்லறம் இனிக்க வாழ்ந்து வரும் செய்தியை படித்தால் அப்படித்தானே...