கொழும்பு மாவட்டத்தில் இருந்து நேற்று 147 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நேற்று 503 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
இதில், கொழும்பிற்கு அடுத்ததாக கம்பஹா மாவட்டத்திலிருந்து 130 பேரும், கண்டி மாவட்டத்திலிருந்து 41 பேரும், களுத்துறை மற்றும் அம்பாறை மாவட்டத்திலிருந்து தலா 28 பேரும், இரத்னபுரி மாவட்டத்திலிருந்து 25 பேரும், புத்தளம் மாவட்டத்திலிருந்து 19 பேரும், யாழ் மாவட்டத்திலிருந்து 11 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குருநாகல் மாவட்டத்திலிருந்து 10 பேரும், நுவலெியா மாவட்டத்திலிருந்து 7 பேரும், காலி மாவட்டத்திலிருந்து 6 பேரும், கேகாலை, மாத்தறை, மாத்தளை, அனுராதபுரம் மாவட்டqடகளிலிருந்து தலா 2 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய 7 பேரும் நேற்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
36 பேர் மாவட்டங்களின் அடிப்படையில் வகைப்படுத்தப்படவில்லை.
இலங்கையின் இரண்டவது அலையில்- ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் கொழும்பு மாவட்டத்தில் இருந்து 9,340 பேரும், கம்பஹா மாவட்டத்தில் இருந்து 6,265 பேரும், களுத்துறை மாவட்டத்தில் இருந்து 1070 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.