மகர சிறையில் காயமடைந்த 61 கைதிகளிற்கு கொரோனா!

மகர சிறைச்சாலையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் பலத்த காயங்களுடன் ராகம பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 61 கைதிகள் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ராகம பொது மருத்துவமனையின் பதில் பணிப்பாளர் வைத்தியர் சரத் பிரேமசிறி தெரிவித்தார்.

நேற்று இரவு சிறைச்சாலையின் பிரதான வாயிலை உடைக்க முயன்றபோது 69 கைதிகள் காயமடைந்துள்ளனர், அவர்களில் 8 பேர் சிறை அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

கொரோனா தொற்று காரணமாக 61 கைதிகள் சிறப்பு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 10 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், சிலர் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

கைதிகளில் ஒருவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

காயமடைந்த இரண்டு சிறை அதிகாரிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால், ராகம மருத்துவமனையின் பாதுகாப்பை காவல்துறை மற்றும் விசேட அதிரடிப்படையினர் பலப்படுத்தியுள்ளனர்.

இதற்கிடையில், மகர சிறைச்சாலையின் 187 கைதிகள் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையின் தனி பகுதிக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர் டிஐஜி அஜித் ரோஹன தெரிவித்தார். அவர்கள் அனைவரும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள்.

இதேவேளை, நேற்று நடந்த களேபரத்தினால் மகர சிறைச்சாலையில் கடுமையான சொத்தழிவுகள் ஏற்பட்டன. சிறைச்சாலை பதிவேடுகள், சிறைக்கூண்டுகள், உணவுக் களஞ்சியம் உள்ளிட்ட பகுதிகள் தீக்கிரையாகின.

சிறைக்கண்காணிப்பாளர், உதவி கண்காணிப்பாளர் ஆகியோரின் அலுவலகங்களும் தீக்கிரையாகின.

சிறைக்கைதிகளின் விபரங்கள் அடங்கிய பதிவேடுகளும் தீக்கிரையாகி விட்டன. இதனால் உயிரிழந்த கைதிகளின் விபரங்களை அறிய சிறிய அவகாசம் தேவையென பொலிசார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here