வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்-அலட்சியமாக பதில் கூறும் நாட்டின் பிரதமர்!

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் ‘டெல்லி சலோ’ போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

குறிப்பாக பஞ்சாப் மற்றும் அரியானாவைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் இதில் பங்கேற்றுள்ளனர். டெல்லியில் போராட்டம் நடத்தும் நோக்கில் வந்த விவசாயிகள் காவல்துறையால் எல்லைகளில் தடுத்து நிறுத்தப்பட்டனர். பின்னர் அவர்களுக்கு டெல்லி புராரி மைதானத்தில் போராட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. அதனை ஏற்று குறிப்பிட்ட அளவு விவசாயிகள் அங்கு சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதேசமயம்  ஜந்தர் மந்தர் பகுதியை தங்கள் போராட்டத்துக்கு ஒதுக்காமல், புராரி மைதானத்தை ஒதுக்கியதால் எல்லையிலேயே பெரும்பாலான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புராரி மைதானத்திற்கு அனைவரும் சென்றால் முன்கூட்டியே பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று உள்துறை மந்திரி அமித் ஷா விடுத்த அழைப்பை விவசாயிகள் ஏற்க மறுத்துஇ எல்லைகளில் போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.

விவசாயிகளின் போராட்டம் இன்று 5வது நாளாக நீடிக்கிறது. விவசாயிகளின் போராட்டம் காரணமாக சிங்கு மற்றும் திக்ரி எல்லைகள் மூடப்பட்டன. எந்த வாகனங்களும் அந்த வழியாக செல்ல அனுமதிக்கப்படவில்லை. வாகனங்கள் மாற்றுப் பாதைகளில் திருப்பி விடப்பட்டன.

டெல்லியை நோக்கி செல்லும் 5 நுழைவு பாதைகளையும் முடக்கப்போவதாக விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கான அதிகாரத்தை அளித்து அவர்களுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். முன்னதாக சிறு விவசாயிகள் தங்கள் பொருட்களை சந்தைக்கு கொண்டுவருமுடியாமல் இருந்தது. ஆனால், புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு அதிக வாய்ப்புகளை அளிப்பது மட்டுமல்லாமல் சட்டரீதியிலான பாதுகாப்பையும் அளிக்கிறது.

இப்போது ஒரு தவறான பிரச்சாரம் பரவி வருகிறது. வேளாண் சட்டம் தொடர்பாக விவசாயிகள் தவறாக வழிநடத்தப்படுகின்றனர்.

விவசாயிகள் தங்கள் நலன்களுக்கு எதிர்கால மற்றும் ஆதாரமற்ற அச்சுறுத்தல்கள் என்ற பெயரில் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள்.

முன்னதாக விவசாய கடன் தள்ளுபடிகள் அறிவிக்கப்படும் போதும் அதன் பயன்கள் விவசாயிகளுக்கு சென்றடையவில்லை.

கடன் தள்ளுபடி ஒரு தந்திரம், முன்னதாக விவசாயிகளுக்கு லாபம் மறுக்கப்பட்டது, இடைத்தரகருக்கு லாபம் உறுதி செய்யப்பட்டுவந்தது. விவசாயிகளில் ஒரு பகுதியினர் சந்தேகம் கொண்டிருந்தால்,அவர்கள் எப்போதுமே முன்பு ஏமாற்றப்பட்டுள்ளனர்.

புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் நலனுக்காகவே கொண்டுவரப்பட்டுள்ளது. அடுத்து வரும் நாட்களில் நாம் இந்த புதிய வேளாண் சட்டங்கள் மூலம் கிடைக்கும் நன்மைகளை பார்த்து அனுபவிக்கப்போகிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here