வலி வடக்கு பிரதேசசபை வரவு செலவு திட்டம் நிறைவேற்றம்!

வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 27 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்கு உள்பட்ட வலி.வடக்கு பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தவிசாளார் சோ.சுகிர்தனால் இன்று சபையில் முன்வைக்கப்பட்டது.

39 உறுப்பினர்களைக் கொண்ட சபையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது 30 உறுப்பினர்கள் ஆதரவாகவும் 3 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் உறுப்பினர் ஒருவர் உள்பட 4 பேர் சபைக்கு சமூகமளிக்கவில்லை. இரண்டு உறுப்பினர்கள் கட்சிகளால் நியமிக்கப்படவில்லை.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களும், ஈபிடிபியின் 6 உறுப்பினர்களும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் 4 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலா 2 உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்தனர்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 3 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர். அகில தமிழ் காங்கிரஸின் உறுப்பினர் ஒருவர் நடுநிலை வகித்தார்.

இந்த நிலையில் வலி.வடக்கு பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 27 மேலதிக வாக்குகளால் வெற்றிபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here