110 விவசாயிகள் கழுத்தறுத்து கொலை!

நைஜீரியாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் விவசாய குடும்பங்களை சேர்ந்த 110 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் கழுத்தறுத்து கொல்லப்பட்டுள்ளனர். பல பெண்கள் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.

13 ஆண்டுகளுக்கு பிறகு போர்னோ மாகாணத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடைபெற்றது. இதனிடையே அந்த மாகாணத்தில் நெல் உற்பத்திக்கு பெயர்போன கரின் குவாஷேபே என்ற கிராமம் மற்றும் அயல் கிராமங்களில் வயல்களில் அறுவடை நடைபெற்றது. பெரும்பாலான விவசாயிகள் வாக்களிக்க செல்லாமல் வயல்களில் அறுவடையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்தநிலையில் குவாஷேபே மற்றும் அயல் கிராமங்களில் வயல்களில் அறுவடையில் ஈடுபட்டிருந்த விவசாயிகளை சுற்றி வளைத்த பயங்கரவாதிகள், ஈவிரக்கமின்றி தாக்குதல் நடத்தினர்.

இதில் 40 பேர் கொல்லப்பட்டதாக முன்னர் செய்தி வெளியானது. தற்போது உயிரிழப்பு 110 ஆக உயர்ந்துள்ளது. பலர் காயமடைந்துள்ளனர். பல பெண்கள் கடத்தப்பட்டுள்ளனர்.

இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு அந்த நாட்டின் ஜனாதிபதி முகமது புகாரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “போர்னோ மாகாணத்தில் பயங்கரவாதிகளால் எங்களின் கடின உழைப்பாளிகளான விவசாயிகள் கொல்லப்பட்டதை நான் கண்டிக்கிறேன். இந்த விவேகமற்ற கொலைகளால் முழு நாடும் பாதிக்கப்படுகிறது” என்றார்.

இந்த தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனால் போகோ ஹராம் மற்றும் அதிலிருந்து பிரிந்த மேற்கு ஆபிரிக்கா மாகாணத்தில் உள்ள இஸ்லாமிய அரசு (ISWAP) ஆகியவை சமீபத்திய ஆண்டுகளில் இப்பகுதியில் தொடர்ச்சியான கொடிய தாக்குதல்களை நடத்தியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here