மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட ஒரு அமைதியின்மையில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளா். மேலும் மூன்று கைதிகள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர களனி மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் ராகம காவல்துறையின் பொறுப்பதிகாரி தலைமையிலான நான்கு பொலிஸ் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
சிறைச்சாலையிலிருந்து தப்பிச் செல்ல முற்பட்ட கைதிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் கைதி கொல்லப்பட்டுள்ளார். சிறைச்சாலையில் தொடர்ந்து அமைதியின்மை நிலவுகிறது.
சிறைச்சாலையின் வெளிப்புற பாதுகாப்பிற்கு விசேட அதிரடிப்படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.