தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள்

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நியுவெலி தோட்டத்தில் 12 அறைகளை கொண்ட தொடர் லயன் குடியிருப்பில் கடந்த 27ம் திகதி ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் 12 வீடுகள் முற்றாக எரிந்து சாம்பலாகியது. இதன் போது 50 பேர் பாதிக்கப்பட்டனர்.

இதேவேளை இவர்களின் வீடுகளில் இருந்த உடைகள், பெறுமதி மிக்க பொருட்கள் சிவில் ஆவணங்கள், நகைகள் மற்றும் மாணவர்களின் பாடசாலை உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்தும் தீயினால் எரிந்து சாம்பலாகின.

பாதிக்கப்பட்டவர்களின் தேவையறிந்து வன்னி ஹோப் நிறுவனத்தின் நிதி உதவியுடன் மலையக சமூக அபிவிருத்தி பேரவை ஊடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆடைகள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் மலையக சமூக அபிவிருத்தி பேரவையின் நிறைவேற்று குழு உறுப்பினர்களான என்.முரளிதரன், ஆர்.சந்திரமோகன்,எஸ்.புஸ்பராஜ் மற்றும் என்.நகுலேஸ்வரன் ஆகியோரால் நேரடியாக சென்று மக்களிடம் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

-தலவாக்கலை பி.கேதீஸ்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here