‘தாயுடன் உறவிலிருந்த இலங்கையரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டேன்’: ஜப்பான் சிறுமி புதுக்குண்டு!

இலங்கையில் கொரோனா அபாயத்திற்குள்ளும் ஜப்பானிய சிறுமியின் விவகாரம் ட்ரெண்டிங்காகிக் கொண்டிருக்கிறது. முதலாளி வீட்டு பெண்ணை “தூக்கி வந்த“ இலங்கை இளைஞன் எட்டு மாதமாக தலைமறைவாக இருந்தார், கைதாகினர் என பரபரப்பாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில், மேலுமொரு குண்டை ஜப்பான் சிறுமி போட்டுள்ளார்.

தொழில் தேடி ஜப்பானிற்கு சென்ற நீர்கொழும்பு இளைஞன், ஜப்பானிய பெண் தொழிலதிபரின் வீட்டு பூங்காவை பராமரிக்கும் பணியில் இணைந்திருந்தார். இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் அவர், எஜமானியின் 15 வயது மகளுடன் இலங்கைக்கு தப்பி வந்தது, கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டது பற்றிய செய்திகள் ஏற்கனவே வெளியாகின.

இப்பொழுது சிறுமி புதிய குண்டை போட்டுள்ளார்.

பராமரிப்பு மையமொன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அவர், வானொலி ஒன்றிற்கு பேட்டியளித்தார். அதில் தனது தாயின் இலங்கைக் காதலனால் தான் துஷ்பிரயோகத்திற்குள்ளானதாக குற்றம்சாட்டியுள்ளார்.

தாயின் சட்டவிரோத உறவினாலேயே இலங்கைக்கு தப்பி வந்ததாக தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

“நான் விருப்பத்துடனேயே இலங்கை இளைஞருடன் வந்தேன். எனக்கு வீட்டில் நிறைய பிரச்சனைகள் இருந்தன.

எனது தாயுடன் உறவு வைத்திருக்கும் ஒரு இலங்கையர் இருக்கிறார். அவர் பெயர் கொஸ்டா. அவர் என்னை நிறைய துன்புறுத்தினார். நான் பல முறை துஷ்பிரயோகம் செய்யப்பட்டேன்.

நான் பல சந்தர்ப்பங்களில் என் அம்மா மற்றும் அவருடன் பயணங்களுக்கு சென்றேன். அவரும் பல முறை இலங்கைக்கு வந்தார். அவர் திரும்பி வந்தபோது, ​​அவர் என்னை துஷ்பிரயோகம் செய்தார்.

அவர் என்னை முதன்முதலில் துஷ்பிரயோகம் செய்தது ஜப்பானில். அந்த நேரத்தில் என் அம்மா அங்கே இருந்தார். அவர்கள் இருவரும் குடிபோதையில் இருந்தனர்.
இந்த சம்பவங்கள் அனைத்தும் எனது தாய்க்கு தெரிந்தே நடந்தன. என்னால் மீண்டும் ஜப்பான் செல்ல முடியாது. நான் சென்றால், எனது தாயும் அவருடன் உறவு வைத்திருக்கும் கொஸ்டா என்ற இலங்கையரும் என்னைத் துன்புறுத்தலாம். எனது தாயையும் கொஸ்டாவையும் கைது செய்யுங்கள் என்று சொல்கிறேன். எனது இலங்கை காதலனை விருப்பத்துடன் திருமணம் செய்து கொண்டேன். என்னால் மீண்டும் ஜப்பானுக்கு செல்ல முடியாது” என சொல்லியிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here