இன்று 487 பேருக்கு தொற்று!

இலங்கையில் மேலும் 213 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த அனைவரும் நோயாளர்கள் உடன் நெருங்கிப் பழகியவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் இன்றைய தினம் இதுவரையில் 487 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் மொத்த கொரோனா தொற்று 22,988 ஆக உயர்ந்துள்ளது.

மினுவங்கொட- பேலியகொட கொத்தணியில் கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 19,450 ஆக அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here