மைத்திரிக்கு வந்த தொலைபேசி அழைப்புக்களை மறந்த உதவியாளர்!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் தனிப்பட்ட மெய்க்காப்பாளர் பொலிஸ் உத்தியோகத்தர் புஷ்பகுமார நேற்று உயிர்த்த ஞாயிறு படுகொலை தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முன் சாட்சியம் அளித்தார்.

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் இயக்குநரான நிலந்த ஜெயவர்தன உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு முன்னதாக, ஜனாதிபத மைத்திரிபால சிறிசேனவின் தொலைபேசிக்கு அழைப்பு ஏற்படுத்தினாரா என்பது  தனக்கு நினைவில் இல்லை என்று கூறினார்.

எவ்வாறாயினும், ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவுக்கு முன் இந்த அதிகாரி அளித்த அறிக்கைக்கும் நேற்று அளிக்கப்பட்ட அறிக்கைக்கும் இடையில் முரண்பாடுகள் இருப்பதை ஆணைக்குழு அவதானித்தது.

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சிங்கப்பூரில் தங்கியிருந்தபோது, ​​புஷ்பகுமார ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ தொலைபேசியை வைத்திருந்தார். இன்றும் முன்னாள் ஜனாதிபதியின் தனிப்பட்ட மெய்க்காப்பாளராக பணியாற்றுகிறார்.

முன்னாள் ஜனாதிபதியுடன் சிங்கப்பூர் பயணத்தில் சென்ற நபர்கள் யார் என்று அரசாங்கத்தின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சாட்சியைக் கேட்டார். ஜனாதிபதியின் மனைவி, தனியார் மருத்துவர், தலைமை பாதுகாப்பு அதிகாரி, மற்றும் அவரும் சென்றதாக சாட்சி கூறினார்.

அப்போது கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கேட்டார், “உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு முன்னதாக காலை 7:59 மணியளவில் பேஜெட் வீதியில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தின் ஊடாக நிலந்த ஜெயவர்தனவின் அழைப்பு உங்களிற்கு கிடைத்ததா ” என்றார்.

ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததாக அறிக்கை காட்டினாலும், அது அவருக்கு நினைவில் இல்லை என்று சாட்சி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here