மாவீரர் தினத்தை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் மெழுவர்த்தி ஏந்தி அஞ்சலி.

ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரை அருகில் மாவீரர் தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியினர் திரளாக கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
உயிர் தியாகம் செய்த விடுதலைப்புலிகள் மற்றும் பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாம் தமிழர் கட்சியினர் தமிழகம் முழுவதிலும் உள்ள  பல்வேறு பகுதிகளில் இன்று அஞ்சலி செலுத்தினர்.
இதன் தொடர்ச்சியாக ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள  அக்னிதீர்த்த கடற்கரையில் உயிர் தியாகம் செய்த விடுதலை புலிகள் மற்றும் பொது மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இரவு சுமார் 7  மணி அளவில் பாடல் இசைக்கப்பட்டு கண்ணீர் மல்க மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் ராமநாதபுரம், திருப்புல்லாணி, திருவாடனை, முதுகுளத்தூர், கடலாடி, ஆர்எஸ் மங்கலம் உள்ளிட்ட  மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நாம் தமிழர் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் பல் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம் மாவட்ட நாம் தமிழர் கட்சி மாவட்ட  செயலாளர் கண் இளங்கோ முன்னெடுத்து நிகழ்ச்சியை நடத்தினார். மாவீரர் அஞ்சலி செலுத்துவதை யொட்டி போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here