போர்க்கால நிலைமையில் குடாநாடு: முகாம்களை விட்டு வீதிக்கிறக்கப்பட்ட படையினர்!

யாழ்ப்பாண குடாநாட்டில் இராணுவ முகாம்களில் முடக்கப்பட்டிருந்த இராணுவத்தினர் அனைவரும் வீதிகளில் களமிறக்கப்பட்டுள்ளனர். போர்க்கால நிலைமை ஏற்பட்ட காட்சி குடாநாட்டில் தென்படுகிறது.

முக்கிய ஆலயங்கள், பொது இடங்கள், மாவீரர் விளக்கேற்றப்படுமென படைத்தரப்பு கருதம் இடங்கள் அனைத்தும் படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

கோப்பாய் துயிலுமில்ல பகுதியில் வீதி தடை செய்யப்பட்டுள்ளது. துயிலுமில்ல பகுதியை யாரும் நெருங்க முடியாத விதத்தில் வீதியின் இரண்டு அந்தங்களும் தடையேற்படுத்தப்பட்டுள்ளது. வீதி தடை செய்யப்பட்டுள்ளது என்ற அறிவித்தல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

கோப்பாயில் மாவீரர் அஞ்சலி செய்யப்படும் பகுதிக்கு அருகே, இராணுவத்தின் தண்ணீர் பவுசர் நிறுத்தப்பட்டு வீதி தடை செய்யப்பட்டுள்ளது. அங்கு பெருமளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

கொடிகாமம் துயிலுமில்லம் இராணுவ முகாமாக அமைந்துள்ள நிலையிலும், அங்கு வீதியில் இராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளனர். கொடிகாமம் சந்தியில் இருந்து பருத்தித்துறை செல்லும் வீதி முழுமையான இராணுவ வலயத்தை போன்ற தோற்றமளிக்கிறது. குச்சொழுங்கைகள், சந்திகள், ஆலயங்களில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here