கண்டி தேசிய வைத்தியசாலையில் கடமையாற்றுபவர்களிடம் நடத்தப்பட்ட சீரற்ற பிசிஆர் சோதனையில், இரண்டு தாதியர்கள் கொரோனா தொற்றிற்கு உள்ளாகியுள்ளமை தெரிய வந்துள்ளது. வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்தியர் இரேஷா பெர்னாண்டோ இதனை தெரிவித்தார்.
தொண்டை, காது மற்றும் மூக்கு சிகிச்சை பிரிவில் கடமையாற்றும் இரண்டு தாதியர்களே தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.
இருவரும் சிகிச்சைக்காக தெல்தெனிய சிகிச்சை வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டனர். அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
.