எங்கள் பிள்ளைகளிற்கு அஞ்சலி செலுத்த முடியாதா?: புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு பகுதிகளில் கதவடைப்பு; இராணுவம் மிரட்டல்!

இன்று மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை அனுட்டிக்க முடியாதவாறு அரசு பல முட்டுக்கட்டைகளை போட்டு வருகிறது. இதனால், தமது பிள்ளைகளிற்கு அஞ்சலி செலுத்த முடியாத சூழ்நிலை பல பெற்றோருக்கும், உறவினர்களிற்கும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்றைய தினம் புதுக்குடியிருப்பு மற்றும் முல்லைத்தீவு நகர வர்த்தகர்கள் தங்களுடைய கடைகளை பூட்டி கடையடைப்பு மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் குறித்த இரண்டு நகர் பகுதிகளுக்கும் சென்று பொலிசார் மற்றும் இராணுவத்தினர், இராணுவ புலனாய்வாளர்கள் கடை உரிமையாளர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடனடியாக கடையை திறக்குமாறு அச்சுறுத்தி வருவதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

இருப்பினும் வர்த்தகர்கள் தங்களுடைய கடைகளை திறக்காது தொடர்ந்தும் கடையடைப்பு மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here