எல்.பி.எல் முதல் ஆட்டத்தில் கண்டியை வீழ்த்தியது கொழும்பு!

இசுரு உதனவின் சகலதுறை ஆட்டத்தின் உதவியுடன் கண்டி டக்கர்ஸ் அணியை வீழ்த்தியது கொழும்பு கிங்ஸ். அம்பாந்தோட்டையில் நேற்று நடந்த 2020 லங்கா பிரீமியர் லீக்கின் முதலாவது ஆட்டம் சுப்பர் ஓவர் வரை செல்ல, கொழும்பு கிங்ஸ் வெற்றிவாகை சூடியது.

வண்ணமயமான மெய்நிகர் தொடக்க விழாவுடன் நேற்று மாலை எல்.பி.எல் போட்டிகள் ஆரம்பித்தன.

இரண்டு அணிகளும் நிர்ணயிக்க 20 ஓவர்களில் 219 ஓட்டங்களை பெற்றன. இதையடுத்து ஆட்டம் சூப்பர் ஓவரிற்கு சென்றது.

முதலில் ஆடிய கொழும்பு கிங்ஸ் ,ஆண்ட்ரே ரஸ்ஸல், அஞ்சலோ மத்யூஸ் மற்றும் இசுரு உதனா ஆகியோர் சூப்பர் ஓவரில் 16/1 என்ற ஸ்கோரை எட்டினர்.

பின்னர் ஆடிய கண்டி டஸ்கரை, சூப்பர் ஓவரில் 12/0 என இசுரு உதன கட்டுப்படுத்தினார்.

ரொஸ் வென்ற கிங்ஸ் கப்டன் அஞ்சலோ மத்யூஸ் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார்.

ஆப்கானிஸ்தான் வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸுடன் தொடக்க ஆட்டக்காரரான  குசல் ஜனித் பெரேரா களமிறங்கினார். இருவரும் அம்பாந்தோட்டை மைதானத்தை கொளுத்திப் போட்டனர்.

தொடக்க வீரர் குர்பாஸ் 22 பந்தில் 53 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்த ஜோடி பவர்-பிளே ஓவர்களில் 75 ரன்கள் எடுத்தது. பின்னர், மெண்டிஸ் 30 ரன்கள், அசெல குணரத்ன 20 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார். பெரேரா வெறும் 52 பந்துகளில் 87 ரன்கள் எடுத்தார்.

கண்டி டஸ்கர்ஸ் 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 219 ரன்கள் எடுத்தனர்.

கொழும்பு கிங்ஸின் கைஸ் அஹ்மத், துஷ்மந்த சமீர மற்றும் எம்.எஸ். கோனி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இலக்கை விட்டிய கொழும்பு அணியின் தொடக்க வீரர்  தினேஷ் சந்திமல் இரண்டாவது ஓவரில் கொடுத்த வாய்ப்பை, டஸ்கர்ஸ் கோட்டை விட்டனர்.

சந்திமல் மற்றும் லாரி எவன்ஸ் தொடக்க விக்கெட்டுக்கு 64 ரன்கள் எடுத்து வெற்றிக்கு சரியான தளத்தை அமைத்தனர். இதில் டஸ்கர்ஸ் செய்த களத்தடுப்பு கோளாறுகளையும் சுட்டிக்காட்ட வேண்டும்.

சந்திமல் 46 பந்துகளில் 80 ஓட்டங்களை பெற்றார். ரஸ்ஸல் வெறும் 13 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார். இசுரு உதான 12 பந்துகளில் 34 ரன்கள் எடுக்க, ஆட்டம் சமனிலையில் முடிந்தது.

பந்துவீச்சில் நுவன் பிரதீப் 2/34, நவீன்-உல்-ஹக் 2/40 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

ஆட்டநாயகன் தினேஷ் சந்திமல்.

இன்னிங்ஸின் ஆரம்ப பகுதியில் மூத்த இர்பான் பதானுக்கு ஏற்பட்ட காயம் உதானாவின் இருபதுக்கு 20 மாஸ்டர் வகுப்பிற்கு முன் 2020 எல்பிஎல் துவக்க வீரரை வெல்வதற்கு நிச்சயமாக முயன்ற டஸ்கர்களை காயப்படுத்தியது.

இன்று, எல்.பி.எல் 2020 இன் இரண்டாவது ஆட்டத்தில் காலி கிளாடியேட்டர்கஸ் அணி,  யாழ்ப்பாண ஸ்டாலியன்ஸை எதிர்கொள்வார்கள். இரவு 8 மணிக்கு ஆட்டம் ஆரம்பிக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here