கோட்டா- டோவல் சந்திப்பு!

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்துள்ளார்.

ஜனாதிபதி ராஜபக்ஷ மற்றும் அஜித் டோவல் ஆகியோர் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது, இந்தியப் பெருங்கடலின் பாதுகாப்பு, வர்த்தகம், புதிய முதலீடுகள் தொடர்பாக விவாதித்தனர் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இரு தரப்பும் புதிய இந்திய முதலீடுகள், உள்கட்டமைப்பு திட்டங்களின் தொடர்ச்சி மற்றும் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதித்தன.

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், கடல்சார் பாதுகாப்பு குறித்த உயர் மட்ட முத்தரப்பு கூட்டத்திலும் கலந்து கொண்டார். இந்திய பெருங்கடலில் ஆபத்தான போதைப்பொருள் கடத்தல், மீட்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இதன்போது விவாதிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here