அவுஸ்திரேலியாவின் விக்டோரியாவின் மோனாஷ் நகரசபை உறுப்பினராக இலங்கையில் பிறந்த அஞ்சலி டி சில்வா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பசுமைக் கட்சியிலிருந்து நகர சபைக்கு மோனாஷ் தேர்ந்தெடுக்கப்பட்டார், மேலும் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு மோனாஷ் நகர சபை உறுப்பினராக பணியாற்றுவார். விக்டோரியா மாநிலத்தில் உள்ளூராட்சி மன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த முதல் நபர் இவராவார்.
அவுஸ்திரேலியாவில் வசிக்கும் பட்டய சிவில் பொறியியலாளர்கள் சமன் டி சில்வா மற்றும் மிஹிரி பிரேமாதிலகே ஆகியோரின் மூத்த மகள் அஞ்சலி. தனது தங்கை சரணி மற்றும் பெற்றோருடன் நான்கு வயதில் அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்தார்.
மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் முதல் வகுப்பு கௌரவ பட்டமும் அதே பல்கலைக்கழகத்தில் பத்திரிகை மற்றும் தகவல் தொடர்பு துறையில் இளங்கலை பட்டமும் பெற்றார். தனது உயர் கல்விக்குப் பிறகு, இங்கிலாந்து, ஹொங்கொங், அவுஸ்திரேலியாவில் பல தனியார் நிறுவனங்களுக்கு சட்டத்தரணியாகவும் பணியாற்றினார். தனது சட்ட வாழ்க்கைக்கு மேலதிகமாக, இங்கிலாந்தில் உள்ள பார்க்லேஸ் வங்கி மற்றும் ஸ்கொட்லாந்தின் ரோயல் வங்கி ஆகியவற்றில் பணியாற்றியுள்ளார்.