மன்னார் ஆசிரியர் கைது: பழிவாங்க மாட்டி விடப்பட்டிருக்கலாமென சந்தேகம்!

மன்னாரில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கஞ்சாவுடன் சிக்கியதாக வெளியான செய்தியில், புதிய அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆசிரியரை சிக்க வைப்பதற்காகவே அவரது மோட்டார் சைக்கிளிற்குள் வேறு யாரோ கஞ்சா பொதிகளை மறைத்து வைத்திருக்கலாமென கருதப்படுகிறது.

இதையடுத்து, ஆசிரியர் நேற்று மாலையே விடுவிக்கப்பட்டு விட்டார்.

மன்னாரிலுள்ள பிரபல பாடசாலை ஆசிரியர் ஒருவர் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகங்கள் நேற்று மாலை பரபரப்பாக செய்தி வெளியிட்டன. இது தொடர்பில் தமிழ் பக்கம் விசாரித்தபோது, மன்னாரில் ஆசிரியர் ஒருவர் இராணுவ புலனாய்வுத்துறையின் ஒத்துழைப்புடன் கைதானதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

அந்த செய்தியை தமிழ்பக்கம் நேற்று வெளியிட்டது.

எனினும், பொலிசார் தொடர்ந்த விசாரணையில், ஆசிரியரின் மோட்டார் சைக்கிளிற்குள் வேறு நபர்கள் கஞ்சாவை வைத்திருந்திருக்கலாமென தெரிய வந்துள்ளது. இதையடுத்து ஆசிரியர் விடுவிக்கப்பட்டார்.

ஆசிரியர் பாடசாலைக்கு முன்பாக கைதான தகவலும் தவறானது.

ஆசிரியரை பழிவாங்கும் நோக்கத்துடன் வேறு நபர்கள், அவரது மோட்டார் சைக்கிளிற்குள் கஞ்சாவை மறைத்து வைத்திருக்கலாம் என கருதப்படுகிறது. கஞசாவை மறைத்து வைத்த நபர் யார் என பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை, நேற்று ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டார் என்ற சம்பவத்தின் அடிப்படையில் நேற்று தமிழ்பக்கம் செய்தி வெளியிட்டது. எனினும், பொலிஸ் விசாரணையில், ஆசிரியர் திட்டமிட்டு மாட்டி விடப்பட்டிருக்கலாமென்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த சம்பவத்தினால் ஆசிரியருக்கு ஏற்பட்டுள்ள அசெளகரியங்களிற்கு தமிழ்பக்கமும் வருத்தத்தை தெரிவித்து கொள்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here