பெண் ஊழியரை தாக்கிய தலைமை பொறியியலாளர் கைது

அலுவலகத்திற்குள் பெண் ஊழியரை தாக்கிய பிரதான பொறியியலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேல் மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் உடுகம்பொல அலுவலகத்தின் பிரதான பொறியியலாளர், அலுவலகத்தில் பணியாற்றும் பெண் ஊழியரை தாக்கியிருந்தார். இது தொடர்பாக வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், இன்று அவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறிப்பிட்ட கடமையை செய்வதில் தாமதமாகிவிட்டதாக குற்றம் சாட்டி பெண் ஊழியரை தாக்கியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

குறிப்பிட்ட பொறியாளரை இடைநீறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here