மதுபான போத்தல்களை மீள பெற திட்டமில்லையெனில் போத்தலில் விற்பனை செய்ய தடை!

மதுபான போத்தல்களை மீள சேகரிக்கும் திட்டத்தை ஆறு மாதங்களிற்கும் தயாரிக்கும்படி மதுபான தொழிற்சாலைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தள்ளார். சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அதை செய்யத் தவறினால், அடுத்த ஆண்டு முதல் மதுபானத்தை போத்தல்களில் அடைத்து விற்பது தடை செய்யப்படும் என்றும் கூறினார்.

மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை நடத்திய ஆய்வில், ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 70 மில்லியன் மதுப் போத்தல்களை பாவனையாளர்கள் சுற்றுச்சூழல் பகுதிகளில் வீசுகிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.

இது சுற்றுச்சூழலுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்துகிறது என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. மதுபானத் தொழிற்சாலைகளால் கிட்டத்தட்ட 70 மில்லியன் மதுபான போத்தல்கள் சுற்றுச்சூழலுடன் கலக்கிறது.

ஜனவரி (2021) முதல் ஆறு மாதங்களுக்குள் இந்த மதுபான போத்தல்கள் தொடர்பான மாற்று தீர்வுகளை சமர்ப்பிக்க மதுபான தொழிற்சாலைகளின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கை எடுக்காவிட்டால், மதுபானத்தை போத்தல்களில் அடைத்து விற்பதை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here