பச்சிலைப்பள்ளி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட இந்திராபுரம் பகுதியில் வாழ்வாதாரத்தினை ஊக்கபடுத்தும் பொருட்டு பச்சிலைபள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் அவர்களால் குழாய் கிணறும் விதை தானியங்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து முப்பது வருடங்கள் கடந்த நிலையில் தனியாக யாரின் உதவியும் இன்றி வாழ்த்துவரும் முஸ்லீம் தாயொருவர் தனது நிலை குறித்து தவிசாளரிடம் தெரியப்படுத்தியிருந்தார்.
இந்த வேண்டுகோளினை ஏற்று நேரடியாக சென்று பார்வையிட்டு குறித்த பிரதேச அமைப்புகளுடன் கலந்துரையாடியபின் வர்த்தகர் ஒருவரின் நிதி உதவியுடன் குறித்த குழாய் கிணற்றை அமைத்து பயிர் செய்கைக்கான விதை தானியத்தையும் வழங்கியிருந்தார்
குறித்த நிகழ்விற்கு தவிசாளருடன் உபதவிசாளர் கஜன் உறுப்பினர்களான ரமேஷ், வீரவாகுதேவர், மற்றும் இளைஞர் அணியின் பொருளாளர் ஞானம் ஆக்கியோர் உடனிருந்தனர்.