யாழ்ப்பாண பல்கலைகழக ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் 3 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இன்று (24) யாழ் பல்கலைகழக மருத்துவபீட ஆய்வு கூடத்தில் 121 பேரின் மாதிரிகள் சோதனைக்குட்படுத்தப்பட்டன.
இதன்போது, யாழ்ப்பாணம், நல்லூரடியை சேர்ந்த 70 வயதான பெண்மணியொருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார். அவர் கடந்த 11ஆம் திகதி கொழும்பிலிருந்து வந்து தங்கியிருந்துள்ளார்.
இதுதவிர, காங்கேசன்துறை கடற்படை முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 2 கட்ற்படையினரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.