புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் நூலக சேவை மாங்குளம் நகர் சந்தை வளாக கடைத் தொகுதியின் மேற்தளத்தில் நேற்று (23) ஆரம்பிக்கப்பட்டுள்ளது
12.11.2020 அன்று நடைபெற்ற புதுக்குடியிருப்பு பிரதேச சபை அமர்வில் மாங்குளம் பகுதியில் நூலகம் ஒன்றின் அவசியம் பற்றிய பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டிருந்தது
அதனடிப்படையில் 23.11.2020 நேற்று புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் ஆ.தவகுமாரன் அவர்களால் பிரதேச சபையின் நூலக சேவை மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நூலக சேவையினை பாடசாலை மாணவர்கள் மற்றும் பொது மக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறும் அத்துடன் இம்மாதம் வாசிப்பு மாதமாக காணப்படுவதனால் நூலகத்திற்கான புதிய அங்கத்தவர்கள் கட்டணம் இன்றி விண்ணப்ப படிவ கட்டணத்துடன் மாத்திரம் (ரூ.10) அங்கத்தவர்களாக இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதேவேளை புதுக்குடியிருப்பு பிரதேச சபையினால் குறித்த வளாகத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்று வருவதோடு மக்கள் ஒரு லீற்றர் இரண்டு ரூபா என்ற குறைந்த விலையில் குடிநீரினை பெற்றுக்கொள்ள முடியும் .