அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு தடுப்பு மையங்கள் தமது நாட்டு மக்களுக்கு ஒரு முக்கிய அறிவித்தலை விடுத்திருக்கின்றன. அதாவது அமரிக்கர்கள் கப்பல் பயணங்களை முற்றாக தவிர்க்க வேண்டும் என்பதே அந்த அறிவிப்பு.
கொவிட் நோய் அனைத்து பிராந்தியங்களிலும் பரவுகிறது. அந்த வகையில் தற்போதைய கால நிலை மாற்றம் கப்பல் பயணத்தில் ஈடுபடுவோருக்கு அதிகளவில் பரவும் வாய்ப்புள்ளதால் மக்கள் கப்பல் பயணஒத்தை தவிர்க்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.
கொவிட் பரவல் காரணமாக கப்பல் பயண சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தன. ஆனால் சில கப்பல் நிறுவனங்கள் மீண்டும் தங்களற் சேவையை ஆரம்பித்திருக்கம் நிலையில் மக்கள் மீண்டும் கப்பல் பயணங்களை மேற்கொள்ள ஆரம்பித்திருக்கின்றனர். இந்நிலையில்அமெரிக்கா தனது மக்களுக்கு கப்பல் பயணங்களை முடிந்தவரை தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுத்திருக்கிறது.