ஜப்பானிலிருந்து தொழிலதிபரின் 15 வயது மகளை கடத்தி வந்த இளைஞனிற்கு வலைவீச்சு!

ஜப்பானில் மில்லியனரான தொழிலதிபரின் 15 வயதான மகளை கடத்திக் கொண்டு வந்து தலைமறைவாகியுள்ள இளைஞனை கண்டுபிடிக்க பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலதிக கல்விக்காக ஜப்பானிற்கு சென்ற இளைஞன், அங்குள்ள தொழிலதிபரின் 15 வயதான ஒரே மகளை கடத்தி வந்த கொச்சிக்கடையை சேர்ந்த 24 வயதான இளைஞனே வலைவீசி தேடப்பட்டு வருகிறார்.

கடந்த 7 மாதங்களாக இந்த ஜோடி தலைமறைவாக இருந்து வருகின்றனர்.

சிறுமியின் தாய் 2020 மார்ச் 15 அன்று கொச்சிக்கடை பொலிசில் புகார் அளித்திருந்தார்.

இந்த இளைஞன் சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு கல்விக்காக ஜப்பான் சென்றுள்ளார். பணத்தேவையை பூர்த்தி செய்ய, ஜப்பானில் ஒரு மில்லியனர் தொழிலதிபரின் வீட்டில் பகுதிநேர வேலை பார்த்துள்ளார்.

இதன்போது, தொழிலதிபரின் 15 வயதுடைய ஒரே மகளோடு காதல் கொண்டிருந்தார். இந்த ஆண்டு மார்ச் 13ஆம் திகதி, பெற்றோருக்கு தெரியாமல் ஜப்பானிய காதலியுடன் விமானம் மூலம் இளைஞர் இலங்கைக்கு வந்துள்ளார்.

இதையடுத்து, சிறுமியின் தாயார் ஜப்பானிய தூதரகம் மற்றும் பொலிசில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து யப்பானிய தூதரகம் தலையிட்டதையடுத்து சிறுமி கண்டுபிடிக்கப்பட்டு, தூதரகத்தால் கொச்சிக்கடையில் உள்ள பலகத்துறை பகுதியில் சுற்றுலா ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டிருந்தார். ஜப்பானிய சிறுமியின் பாதுகாப்பிற்காக, காதலனின் சகோதரியும் ஹொட்டலில் தங்கியிருந்தார்.

ஜப்பானில் இருந்து தனது காதலியின் தாய் இலங்கைக்கு வருவதை அறிந்த சந்தேகநபர், தனது சகோதரியின் உதவியுடன் சுற்றுலா ஹோட்டலில் இருந்து ஜப்பானிய காதலியுடன் தலைமறைவானார்.

2020 மார்ச் 15 யப்பான் சிறுமியின் தாயார் இலங்கை வந்து பொலிசில் முறைப்பாடு செய்தார்.

இது தொடர்பில் பொலிசார் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்ததை தொடர்ந்து, சந்தேக நபர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கடத்தலுக்கு உதவிய  குற்றச்சாட்டில் சந்தேக நபரின் தாய், சகோதரி கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.

கொச்சிக்கடை பொலிசார் நாடு முழுவதுமுள்ள பொலிஸ் நிலையங்களிற்கு இ்த ஜோடியின் புகைப்படங்களை அனுப்பியுள்ளது. அவர்கள் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் 071-8591631 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும் கொச்சிக்கடை பொலிசார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தமிழ்பக்கத்தின் செய்திகளை ஜேவிபி நியூஸ், ஒன்லைன் யப்னா உள்ளிட்ட ஏராளமான இணையங்கள் பிரதி செய்தி வெளியிட்டு வருகின்றன. செய்திகளை உடனுக்குடன் நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ள தமிழ்பக்கத்துடன் இணைந்திருங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here