யாழ் யுவதி மரணம்: வெளிநாட்டிற்கு அனுப்புவற்காக காதலை கைவிட வீட்டுக்காவலில் வைக்கப்பட்டாரா?

தென்மராட்சி மட்டுவில் பகுதியில் யுவதியொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த சம்பவத்தின் பின்னணியில், யுவதி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டமை இருந்தமை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மட்டுவில் கிழக்கை சேர்ந்த 22 வயதான யுவதி கடந்த 21ஆம் திகதி வீட்டில் உயிரை மாய்திருந்தார். பெற்றோர் வேலைக்காக வெளியில் சென்ற நேரத்தில் வீட்டு சுவாமியறைக்குள் உயிரை மாய்த்தார்.

யுவதியின் மரணம் தொடர்பில் சாவகச்சேரி பொலிசார் விசாரணை நடத்தி சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தனர். அந்த அறிக்கையில், யுவதியை வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு திருமணம் செய்வதற்காக காதலை துறக்கும்படி வற்புறுத்தி, வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

திடீர் மரண விசாரணை அதிகாரியின் விசாரணையின் பின்னர் உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


தமிழ்பக்கத்தின் செய்திகளை ஜேவிபி நியூஸ், ஒன்லைன் யப்னா உள்ளிட்ட ஏராளமான இணையங்கள் பிரதி செய்தி வெளியிட்டு வருகின்றன. செய்திகளை உடனுக்குடன் நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ள தமிழ்பக்கத்துடன் இணைந்திருங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here