மஸ்கெலியா பகுதியில் நேற்று (23) ஏழு பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் பாதிக்கப்பட்டடுள்ளனர். தாய், தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகள் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்
தீபாவளி பண்டிகைக்காக கொழும்பிலிருந்து தங்கள் வீட்டிற்கு வந்த உறவினர்களிடமிருந்து இவர்கள் தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.
இதற்கிடையில், கொழும்பில் சிகையலங்கார நிபுணராக பணிபுரிந்த ஒருவர் தீபாவளிக்காக கொட்டகலைக்கு வந்திருந்தார். அண்மையில் அவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அவரின் 2 வயது குழந்தைக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், தீபாவளி திருவிழாவிற்காக ஹட்டன் ஸ்டேடன் தோட்டத்திற்கு வந்த கொழும்பு பகுதியில் பணிபுரியும் மற்றொரு நபர் பாதிக்கப்பட்ட நபராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.