மாந்தை மேற்கு கிராமசேவகர் கொலை வழக்கு சிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டது!

மாந்தை மேற்கில் கிராம அலுவலகர் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர் வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் எம்.கணேசராஜா இன்று திங்கட்கிழமை(13) உத்தரவிட்டார்.

மாந்தை மேற்கில் கொலை செய்யப்பட்ட கிராம அலுவலகர் தொடர்பான வழக்கு விசாரனைகள் இன்றைய தினம் திங்கட்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் மன்னார் நீதவான் எம்.கணேசராஜா முன்னிலையில் விசாரனைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன் போதே விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

அதன் போது இன்றைய தினம் குற்றப்புலனாய்வு பிரிவினர் குறித்த வழக்கினை பாராமெடுத்துள்ளனர்.

அவர்கள் சிறைச்சாலையில் உள்ள தற்போதைய சந்தேக நபராக தடுத்து வைக்கப்பட்டுள்ள நபரை விசாரனை செய்வதற்காக சிறைச்சாலை உத்தியோகத்தர் ஊடாக ஒரு கட்டளையை பெற்றுள்ளனர்.

மேலும் சிலருடைய வாக்கு மூலத்தை பெற்றுக்கொள்ளுவதற்கும் சிலருடைய வங்கி கணக்கு விபரத்தை பெற்றுக் கொள்ளுவதற்குமான கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதே வேளை குறித்த சந்தேக நபரை எதிர் வரும் 7 ஆம் திகதி (7-12-2020) வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் எம்.கணேசராஜா உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here