மன்னாரில் மஞ்சள், கஞ்சாவுடன் இருவர் கைது!

இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக கடத்தி வரப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 721 கிலோ 500 கிராம் மஞ்சள் மூட்டைகள் மற்றும் 3 கிலோ 730 கிராம் கஞ்சா தம்வசம் வைத்திருந்த குற்றசாட்டின் பெயரில் மன்னார் சாயிட் சிட்டி பகுதியை சேர்ந்த இருவர் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய படகும் நேற்று (20) வெள்ளிக்கிழமை மாலை மன்னார் பொலிஸார் மீட்டுள்ளதோடு, சந்தேக நபர் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் பொலிஸ் பிரிவுக்கு உற்பட்ட சாயிட் சிட்டி பகுதியில் இருந்து மன்னார் ஊழல் தடுப்பு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற புலனாய்வு தகவலுக்கு அமைவாக கடற்படையுடன் இணைந்து குறித்த மஞ்சள் மற்றும் கஞ்சா மூடைகள் மீட்கப்பட்டுள்ளது.

இரகசிய தகவலுக்கு அமைவாக சிரேஸ்ர பொலிஸ் அத்தியட்சகர் பண்டுல வீரசிங்கவின் பணிப்பில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் காஸ்தூரி ஆராட்சியின் ஆலோசனையில் மன்னார் பொலிஸ் பொறுப்பதிகாரி C.P.ஜயதிலகவின் வழிகாட்டலில் மாவட்ட குற்ற தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உதவி பொலிஸ் பரிசோதகர் வீரசிங்க தலைமையிலான பொலிஸ் பிரிவினரே மேற்படி மஞ்சள் மற்றும் கஞ்சாவை கைப்பற்றி உள்ளனர்.

மேலும் மன்னார் சாயிட் சிட்டி பகுதியை சேர்ந்த 35 வயதுடைய சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணையின் பின்னர் கைப்பற்றப்பட்ட மஞ்சள் மற்றும் சந்தேக நபர்கள் இன்றைய தினம் மன்னார் நீதவான் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடதக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here