மாவீரர்தினத்தில் மூச்சும் விட முடியாது: வடக்கு, கிழக்கில் பல பகுதிகள் இராணுவ கட்டுப்பாட்டில்!

சிங்கள, ஆங்கில மொழிகளில் முல்லைத்தீவில் அமைக்கப்பட்டுள்ள வீதித்தடை

வடக்கு, கிழக்கில் மாவீரர்தினம் அனுட்டிக்கப்படலாமென கருதப்படும் இடங்கள் அனைத்தும் இராணுவம், பொலிசாரின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

இன்று காலை முதல் இதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது.

யுத்தத்தில் உயிரிழந்தவர்களை அஞ்சலிக்க அனுமதிப்பதில்லையென- தமிழ் மக்களின் அஞ்சலிக்கும் அடிப்படை உரிமையையும் நசுக்கும்- முடிவை எடுத்துள்ள அரசு, ஆயுதப்படைகளின் துணையுடன் அதனை நடைமுறைப்படுத்த ஆரம்பித்துள்ளது.

இதன்படி வடக்கு கிழக்கிலுள்ள துயிலும் இல்லங்கள் மற்றும் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெறுமென படைத்தரப்பு எதிர்பார்க்கும் இடங்கள் அனைத்தும் இராணுவம், பொலிசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படுகிறது.

ஏற்கனவே, அனேகமான பிரதேசங்களில் நீதிமன்றங்கள் மூலம் அஞ்சலி தடைஉத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தவே, அந்த பகுதிகள் படைத்தரப்பின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளதாக, படைத்தரப்பினர் குறிப்பிடுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here