திடீரென கிணற்று நீர் கறுப்பானதால் மக்கள் பீதியில்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப்பிரிவில் வேணாவில் பகுதியில் கிணறு ஒன்றின் நீர் இன்று காலை திடீரென கறுப்பு நிறமாக மாறியது.

இன்று காலையில் இதனை அவதானித்த உரிமையாளர், சம்பந்தப்பட்ட தரப்பினர் அனைவருக்கும் இதனை தெரியப்படுத்தி இருந்தபோதும் நீரை பரிசோதனை செய்வதற்கு உரிய அதிகாரிகள் விடுமுறையில் இருக்கின்ற காரணத்தினால் இதுவரை அந்த செயல்பாடு முன்னெடுக்கப்படவில்லை.

கிணற்றில் உள்ள நீரை வீட்டு உரிமையாளரை எடுத்து வைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நீர் என்ன காரணத்திற்காக நிறம் மாறியது என்பது தொடர்பான தகவல்கள் இதுவரை கண்டறியப்படவில்லை.

திடீரென நீர் கறுப்பு நிறமாக மாறியதால் அச்சமடைந்துள்ள மக்கள், எதற்காக நிறம் மாறியது என்பது தொடர்பாக தெளிவை பெற்றுக் கொள்வதற்காக முற்படுகின்ற போதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளது விரைவான செயற்பாடுகள் இன்மை காரணமாக மக்களது அச்சம் நீடிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here