17 வயது யுவதியுடன் குடும்பம் நடத்த ஆசைப்பட்டவர் 3 பெண்களிற்கு கத்திக்குத்து!

வவுனியா கற்குளம் 4 பகுதியில் குடும்ப தகராறு காரணமாக ஏற்பட்ட கத்திக்குத்து சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதுடன், ஒருவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

இது தொடர்பாக தெரியவருவதாவது,

வவுனியா கற்குளம் பகுதியில் வசிக்கும் 32 வயதுடைய  ஆண் ஒருவர் 17 வயதுடைய பெண் ஒருவருடன் குடும்பம் நடத்தி வந்திருக்கிறார். இதனையடுத்து குறித்த பெண்ணின் தாயார் இருவரையும் பிரிக்கும் முயற்சியில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்திருக்கிறார்.

ஒருவழியாக குறித்த பெண்ணை தாய் தன்வீட்டிற்கு அழைத்துச் சென்றிருக்கிற நிலையில், இன்று மதியம் அந்த பெண்ணின் வீட்டிற்குற் சென்ற குறித்த நபர் பெண்ணின் தாயாருடன்  வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.  இதைத்தொடர்ந்து அங்கு இருந்த கத்தி ஒன்றை எடுத்து பெண்ணின் தாயைத் தாக்க முற்படுகையில்,  குறித்த பெண் இடைமறித்ததால் அந்த பெண்ணையும் தாக்கி பெண்ணின் தாயையும் வெட்டியிருக்கிறார். இதே வேளை இதனைத் தடுக்க வந்த பெண்ணின் வயதான பாட்டி ஒருவரையும் வெட்டியிருக்கிறார்.

இதன் பின், குறித்த பெண்ணை மட்டும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்துவிட்டு வீடு திரும்பிய நிலையில்  வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாரால் கைது செய்யபட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here