கடைசி நேரத்தில் இஸ்ரேல் குடியேற்றம் நோக்கி பொம்பியோ பயணிக்க காரணம் என்ன?

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ இஸ்ரேல் ஆக்கிரமித்த மேற்குக் கரை,  யூத குடியேற்றத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் – இது அமெரிக்காவை சேர்ந்த உயர் அதிகாரியின் முதல் பயணமாகும்.

இஸ்ரேலின் மேற்கு கரையோரத்தில் யூத குடியேற்றங்கள் சர்வதேச சட்டத்திற்கு முரணாக அல்ல என்று கடந்த ஆண்டு 2019 நவம்பர் அமெரிக்கா அறிவித்திருந்தது. 

அதன்படி சரியாக ஒரு வருடத்திற்கு பின்னர் இன்னும் குறுகிய காலத்தில் பதவி விலகவுள்ள நிலையில் மைப் பொம்பியோ இஸ்ரேலிய கரையோர குடியேற்ற பகுதிக்கு நேரடி விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

கடந்த ஆண்டு யூத குடியேற்றத்தை  இஸ்ரேலுக்குள்  ஆதரித்த அமெரிக்காவின் அறிவிப்பு பாலஸ்தீனியர்களை கோபப்படுத்தியிருந்தது. அமெரிக்காவின் கருத்திற்கு பாலஸ்தீனியர்கள் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர்.

1967ஆம் ஆண்டில்  மத்திய கிழக்குப் போரில் சிரியாவிலிருந்து இஸ்ரேல் பாலஸ்தீனியர்களால் கைப்பற்றப்பட்டது..  1981 இல் இணைக்கப்பட்ட மூலோபாய பீடபூமி மீதான இஸ்ரேலிய இறையாண்மையை ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த ஆண்டு அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தார்.

முன்னாள் அமெரிக்கா ஜனாதிபதி டெனால்ட்  டிரம்ப் இஸ்ரேலிய பிரதம அமைச்சர்  பெஞ்சமின் நெதன்யாகுவின் நெருங்கிய கூட்டாளி ஆவார்.

இந்நிலையில் எதிர்வரும் ஜனவரி மாதம் மைக்பொம்பியோ பதவி விலகவுள்ள நிலையில் அவசர அவசரமாக இஸ்ரேலுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ளமை  தந்திரோபாய நோக்கம் கொண்டதாக அமையலாம் என்று ஆய்வாளர்களால் கருதப்படுகிறது. 

கடந்த புதன்கிழமை பொம்பியோ  இஸ்ரேலுக்கு விஜயம் செய்திருந்தார். தான் பதவியிலிருந்து விலகுவதற்கு முன்னர் இதுவே தனது கடைசி பயணமாகலாம் என்றும் மைக் பொம்பியோ தெரிவித்திருந்தார். .

நேற்றைய தினம் (வியாழக்கிழமை) காலை ஜெருசலேமை சென்றடைந்த பொம்பியோ அங்கு  நெதன்யாகுவை சந்தித்திருந்தார். பின்னர் உலங்கு வானூர்தியில் மேற்கு கரையில் உள்ள யூத குடியேற்றத்திற்கு விஜயம் செய்திருந்தார். 

1967 மத்திய கிழக்குப் போரில் மேற்குக் கரையிலும் கிழக்கு ஜெருசலேமிலும் இஸ்ரேல் ஆக்கிரமித்ததிலிருந்து கட்டப்பட்ட சுமார் 140 குடியிருப்புகளில் 600,000 க்கும் மேற்பட்டதில் யூதர்கள் வாழ்கின்றனர். இஸ்ரேல் இதை மறுக்கிற போதிலும், சர்வதேச சமூகத்தின் பெரும்பகுதி சர்வதேச சட்டத்தின் கீழ் குடியேற்றங்களை சட்டவிரோதமாக கருதுகிறது. ஆனால் அமெரிக்கா கடந்த ஆண்டு முதல் குடியேற்றத்தை ஆதரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

நேற்றைய பயணத்தின் போது பொம்பியோ பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலின் கொள்ளை தொடர்பில் விமர்சித்திருந்தார். அதற்கு இஸ்ரேல் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. அமெரிக்கா யூதர்களிடையே விரோதத்தை உண்டு பண்ணுவதாக கூறியது. ஆனால் அது தவறான புரிதலாகும் என்று பொம்பியோ தெரிவித்துள்ளார். 

அமெரிக்க தேர்தலில் தோல்வியடைந்த டொனால்ட்ரம் தன் தோல்வியை ஏற்க மறுத்து வருகிறார். ஆனால் அவர் தோல்வி என்பது உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது. இந்நிலையில் பாதுகாப்பு செயலாளர் மைக்பொம்பியோவும் எதிர்வரும் ஜனவரி மாதத்திதுடன் பதவி விலகவுள்ளார். இந்நிலையில் இஸ்ரேலின் மேற்கு கரையோர யூதர்களை பொம்பியோ சந்தித்துள்ளமை அமெரிக்க அரசியலில் கழுகுபார்வையில் பார்க்கப்படுகிறது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here