உக்ரைன் ஜனாதிபதிக்கு மீண்டும் கொரோனா!

உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலென்ஸ்கிக்கு இரண்டாவது முறை நடத்தப்பட்ட பரிசோதனையிலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் சுமார் 203 நாடுகளில் வியாபித்துள்ளது. இந்த நோய்த்தொற்று உலகம் முழுவதும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நோயினால் உலகத் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள் என மக்கள் பிரதிநிதிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

உக்ரைன் நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் ஜெலென்ஸ்கிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவருக்கு கீவ் நகரில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 2ஆவது முறையாக அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அவருக்கு மறுபடியும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதை அவரே ‘டெலகிராம்’ சமூக வலைத்தளத்தில் நேற்று உறுதி செய்தார். அதே நேரத்தில் அவர் நலமாக உள்ளதாக தெரிவித்துள்ள அவர் தனது பலம் திரும்பி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here