இலங்கைக்கு கடத்தப்படவிருந்த நோயெதிர்ப்பு மருந்துகள் மீட்பு!

தமிழக கடற்கரை வழியாக இலங்கைக்கு மருந்துகள் கடத்தவிருப்பதாக மண்டபம் கடலோர காவல் படைக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்று வியாழக்கிழமை (19) மாலை முதல் ராமேஸ்வரம் முதல் பாம்பன் வரையிலான வடக்கு கடற்கரைப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது தங்கச்சி மடம் வடக்கு கடற்கரை ஓரத்தில் உள்ள முள் புதர் ஒன்றில் சந்தேகத்திற்கிடமாக ஒரு மூட்டை மறைத்து வைக்கப்பட்டிருந்ததை அவதானித்தனர்.

அதனை எடுத்து சோதனை செய்த போது அதில் நோய் எதிர்ப்பு மருந்துகள் இருப்பது தெரிய வந்தது. இலங்கைக்கு கடத்துவதற்காக அவை மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

இதனையடுத்து கடலோர காவல் படையினர் அதனை மீட்டு மண்டபம் கடலோர காவல் படை முகாமுக்கு எடுத்து வந்து சோதனை செய்ததில் மூட்டையில் 1200 மருந்து அட்டைகளில் மொத்தமாக 6 ஆயிரம் மருந்து போத்தல்கள் இருந்துள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட மருந்து குறித்து மருத்துவத்துறையினரிடம் விசாரித்த போது இந்த மருந்து உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பயன் படுத்துவதாக தெரிவித்துள்ளனர்.

தற்போது இலங்கையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் இலங்கையில் இந்த மருந்து கிடைப்பது மிகவும் கடினமாக உள்ளதால் இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கடத்த பதுக்கி வைத்திருப்பதாக உளவுத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட மருந்து இலங்கை ரூபாயின் மதிப்பில் சுமார் 14 இலட்சம் என இருக்கலாம் என இந்திய கடலோர காவல் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here